×

டுகாட்டி மான்ஸ்டர் எஸ்பி

டூகாட்டி இந்தியா நிறுவனம், 2023க்கான புதிய மான்ஸ்டர் எஸ்பி பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.15.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4.3 அங்குல எல்இடி வண்ண டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஸ்போர்ட், ரோடு மற்றும் வெட் என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளது.

இந்த பைக்கில் உள்ள 937 சிசி டிவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார், அதிகபட்சமாக 9,250 ஆர்பிஎம்-ல் 109.9 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 93 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இந்த பைக் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபிள் ஆர்எஸ், பிஎம்டபிள்யூ எப் 900 ஆர் மற்றும் காவாசாக்கி இசட்900 ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post டுகாட்டி மான்ஸ்டர் எஸ்பி appeared first on Dinakaran.

Tags : Ducati ,Dookati India Company ,Dinakaran ,
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி